அட போ தாத்தா நோக்கு வேற வேலையே இல்ல - என்றவாறு ஓடினான் ஹரி.
டேய் தாத்தாவ அப்டிலாம் மரியாதை இல்லாம பேசப்டதுடா - அம்மாவின் குரல்.
அடேய் உனக்கு என் வயசு வரும். அப்போ உன்னையும் இதேமாரி பேரன் பேத்தியெல்லாம் மதிக்கதுடா. - இது தாத்தா.
ஹரி அவன் சிநேகிதன் விக்ரம் ஆத்துக்கு ஓடிக்கொண்டிருக்கிறான். அவன் விக்ரம் வீட்டை அடைவதற்குள் ஹரியை பற்றி சொல்லிவிடுகிறேன்.
ஹரி ஒரு சுட்டி பயல். மேலோட்டமாக பார்த்தல் அவன் எல்லா குழந்தைகள் போல தெரிந்தாலும், அவன் ஆழமாக சிந்திப்பவன். எதையுமே லேசில் விடமாட்டான். தன் மனதிற்குள் தானே ஒரு பிரச்னையை உருவாக்கி அதற்கு தீர்வு காண்பான். அதுதான் அவனது முக்கிய பொழுது போக்கு.
இதோ விக்ரம் வீடு வந்துவிட்டது. விக்ரமின் அம்மா அவனை வைவது வாசலில் கேட்டது.
"பாரு. உன் சிநேகிதன் ஹரி என்னமா புஷ்டியா இருக்கான். அவன் அம்மா எது பண்ணினாலும் புடிகலேன்னு இல்லாம சாப்டுடுவான்."
"சரி இப்போ நாம உள்ளே போவது உசிதமில்லை." ஜன்னல் வழியாக தான் வந்துவிட்டதை அறிவித்தான்.
இருவரும் வைகை ஆற்றங்கரைக்குச் சென்றார்கள். ஏன்டா நம்பாத்துல நம்பள திட்டிண்டே இருக்கா? - விக்ரம் கேட்டான்.
"அவாளோட இயலாமை டா."
"புரியலையே?"
"எங்க தாத்தாவையே எடுத்துக்கோ. சர்கார் உத்தியோகம் பாத்துது. நறைய காசு செத்துது. இப்போவும் பென்ஷன் வாங்கிண்டு இருக்கு. வேற என்ன சாதிசுது? சம்பாதிக்கர்த்தும், பென்ஷன் வாங்கறதும் எல்லாருமே தாண்டா பண்றா."
"வேற என்ன பண்ணணும்கற?" விக்ரம் கேட்டான்.
"நம்பள சுத்தி இருக்கற ஒத்ததொதருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கும் டா. நாம கொழந்தேளா இருக்கும் போது நமக்கு பைரி டேல்ஸ் சொல்லி நம்ம மனச கவரணும். நம்ப அப்பா எப்போவாது சொல்ல முடியாத கொழப்பத்துல இருக்கும்போது, ஆறுதலா பேசி, இதுதான் கொழப்பமா இருக்குனு யூகிச்சு. அதுக்கு மறைமுகமா ஒரு தீர்வு சொல்லணும். அம்மா திருதிருன்னு முழிசுன்றுகரப்போ கைவைத்யம் சொல்லணும். இதெல்லாம் தான் தாத்தா பாட்டியோட கடமை."
"அதவிட்டுட்டு, என்னக்கு அத வாங்கிண்டுவா, இதவாங்கிண்டுவானு மட்டும் சொன்னா யாரடா மதிப்பா? உங்காத்துல உன்கிட்டேந்து வர பீட்பக் வச்சு சமயல திருத்திக்க உங்க அம்மாக்கு உதவிசெய்ய உங்க பாட்டி முன்வரனும்." - விளக்கினான் ஹரி.
80-85 வயதுவரை வாழ்ந்ததே ஒரு சாதனையாகவும். அதற்காக பிறர் மதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் பெரிசுகள் இருக்கும் காலத்தில், வயதில் சிரியவனாலாலும் அறிவில் முதிர்ந்த ஹரியை நண்பனாக பெற்றதில் பெருமை கொண்டான் விக்ரம்.

No comments:
Post a Comment